இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு டீசலின் விலை அதிகரிப்பு காரணமாக நாளொன்றுக்கு இரண்டரை கோடி ரூபா நட்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளாந்தம் புகையிரத திணைக்களத்தால் 40 மில்லியன் ரூபா பெறுமதியான எரிபொருள் பயன்படுத்தப்படுகின்ற நிலையில், 15 மில்லியன் ரூபாவே வருமானமாக கிடைக்கப்பெறுகின்றது.
இந்நிலையில் இரண்டரை கோடிரூபா நாளாந்தம் நட்டம் ஏற்படுவதாகவும், தொடர்ந்து புகையிரத சேவையை முன்னெடுக்கவேண்டுமாயின் புகையிரதக் கட்டணங்களை அதிகரிப்பதை தவிர வேறுவழியில்லை என இலங்கை புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.