இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் கொரோனா தாண்டவம் நான்கு நாட்களில் 200 பேருக்கு கொரோனா

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது கொரோணா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என மாவட்ட மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் 200 பேருக்கு கொரோனாத் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர்களில் 50 பேர் மாணவர்கள் அத்துடன், 16 வயதுக்குட்பட்டவர்கள் 43 பேரும்
உள்ளடங்குகின்றனர். அத்தோடு  இரண்டு  கர்ப்பிணித் தாய்மாரும்
தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என மருத்துவர் நிமால் அருமைநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button