நாட்டில் பத்து நாட்களுக்குத் தேவையான பெற்றோலும், இரண்டு வாரங்களுக்குத் தேவையான டீசலும் கையிருப்பில் இருப்பதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் இன்று (20) தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எரிபொருட்களை ஏற்றிச் செல்லுகின்ற புகையிரதங்கள் மற்றும் பெளசர்களுக்கு பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்பை வழங்குமாறு கோரியுள்ளேன்.
மின்சாரசபைக்குத் தேவையான எரிபொருளும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. விநியோக நடவடிக்கைகளின் தாமதமே எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு காரணம்” என்றார்.