இலங்கைசெய்திகள்

இலங்கை அணியின் உதவிப்பயிற்சியாளராக நவாஸ்

இலங்கை கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான நவீட் நவாஸ் நியமிக்கப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பங்களாதேஷ் 19 வயது கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணிபுரிந்த நவீட் நவாஸ், ஏப்ரல் மாதம் 01ஆம் திகதியில் இருந்து எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது.

2009ஆம் ஆண்டு இலங்கை 19 வயது கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமனம் பெற்றிருந்ததோடு, இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணிக்கும் பயிற்சியாளராக செயற்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் 19 வயது கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயற்பட்ட வேளையில் 2020ஆம் ஆண்டு இளையோர் உலகக் கிண்ணத்தினை முதன் முறையாக பங்களாதேஷ் அணி வெற்றிபெறுவதற்கு பக்கபலமாக இருந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button