இலங்கைசெய்திகள்

பட்டினிச்சாவிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் சர்வகட்சி மாநாட்டில் சுமந்திரன் தெரிவிப்பு

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான பொதுப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்றும், பட்டினியில் வாடும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதார நெருக்கடியால், மக்கள் பட்டினியில் வாடும் நிலை உருவாகியுள்ளது. வடக்கில் இருந்து ஒரே நாளில் 16 பேர் தமிழகம் சென்றுள்ளனர்.

இந்நிலைமை தொடரக்கூடாது. இந்த நிலைமையில் இருந்து மீள்வதற்கான பொறிமுறை அவசியம். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழஙக வேண்டும் எனத்தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button