நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இன்று (13) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பில் பிரதமருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்கும் முயற்சிக்கு இந்தியா முழு ஆதரவை வழங்கும் என தெரிவித்துள்ளார்.