
நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும்,ஹர்த்தாலுக்கு யாழ்.மாநகரம் பூரண ஆதரவினை வழங்கி உள்ளது.
அரச, தனியார் வங்கி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், வர்த்தக நிலையங்களும் முற்றாக மூடப்பட்டுள்ளன.
தனியார் பஸ்சேவை முற்றாக இடம்பெறவில்லை. ஆயினும் அரச பஸ்சேவை இடம்பெறுகின்றது.
யாழ்.மாநகரத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அத்துடன் மக்களின் நடமாட்டம் மிக குறைவாகவே காணப்பட்டது.









