இலங்கைசமீபத்திய செய்திகள்
தனுஷ்கோடிக்கு தப்பிச் சென்ற தம்பதியினருக்கு நடந்தது என்ன?
இலங்கையில் இருந்து படகு மூலம் சென்ற வயது முதிர்ந்த தம்பதிகள் தனுஷ் கோடி கடற்கரையில் மயக்கமுற்று இருந்த நிலையில், பொலிஸரால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க முடியாத மக்கள் நாட்டைவிட்டு இந்தியாவிற்கு தப்பிச்செல்வது அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், திருகோணமலை கடற்பரப்பில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்குச் தப்பிச்சென்ற வயதான தம்பதியினரே மயக்கமுற்று இருந்த நிலையில் பொலிஸரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.