இலங்கைசெய்திகள்

யாழ்.மாநகர எரிபொருள் நிலைய நிர்வாகத்தினர் மீதும் பொலிசார் மீதும் பொது மக்கள் விசனம்

யாழ்.பொலிஸ்நிலையம் அருகில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று(24) சுகாதார ஊழியர்களுக்கு பெற்றோல் வழங்குவதாக ஏற்பாடாகி இருந்தது .

அதிகாலை முதலே அங்கு திரண்ட மக்கள் மதியம் 11 மணி வரை ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்தே பெற்றோலை பெற முடிந்தது .

நேற்றைய தினமே பெற்றோல் வவுசர் பெற்றோலை இறக்கிய நிலையில் இவ்வாறு காலதாமதமாக பெற்றோலை விநியோகித்தமை ஏன்
என கேட்டு மக்கள் விசனம்
தெரிவித்து கூச்சல் இட்டு
எரிபொருள் நிலைய ஊழியர்களுடனும் பொலிசாருடனும் மக்கள் முரன்பட்டனர் .

ஆயிரக்கணக்கான சுகாதார ஊழியர்கள் நாள் முழுவதும் வீதியில் நின்று பெற்றோலை பெற்றமையானது மருத்துவதுறை பணிகளை பாதிக்கும் ஓரு செயற்பாடு என புத்திசாலிகள் சுட்டிகாட்டியுள்ளனர்
மக்களை நெடுநேரம் காவல் இருக்க செய்து விநியோகத்தை
செய்வதன் உண்மையான காரணம் என்ன என்பதை மக்கள் கேட்டு முரன்பட்டனர் .

அங்கு மிக நீண்ட வரிசையில் காத்திருந்த சுகாதார பெண் ஊழியர் ஒருவரையும் ஆண் ஊழியர் ஒருவரையும் ஆவணத்தில் பிரச்சினை என கூறி பெற்றோல் வழங்க முடியாது என பொலிஸ் கூற திருப்பி கெஞ்சி மன்றாடிய ஊழியர்களை தமிழ் பொலிசார் ஒருவர் கடும் தொனியில் விரட்டி ஏசி அனுப்பியதையும்
அங்கு அவதானிக்க முடிந்தது.

பெறுமதி மிக்க மனித வளங்கள் மிக அதிக நேரம் வீதியில் காத்திருந்தால் நாடு படு பாதகமான நிலைக்குத்தான் செல்லும் என்பதை நினைவில் கொண்டு மிக சரியான ஒரு விநியோக பொறி முறைக்கு செல்ல வேண்டியதே இன்றைய தேவை என்பதை ஐவின்ஸ் தமிழ்
சுட்டிக்காட்டுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button