கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தை விளையாட்டு அமைச்சில் இருந்து விலக்கி கரைச்சி பிரதேச சபையிடம் கையளிக்க வேண்டுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (09) உரையாற்றுமபோதே அவர் மேற்கண்ட கோரிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் முன்வைத்தார்.
12 வருடமாக புனரமைப்புப் பணிகள் நிறைவடையாமால் உள்ளது. பிரதேச சபையிடம் கையளித்தால் அவர்களால் வெளிநாட்டு புலம்பெயர் தமிழர்களின் உதவியைப் பெற்று மைதானத்தை பரமாரிக்க முடியும். எனவே, பிரதேசசபையிடம் மைதானத்தை கையளிக்கவேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், குறித்த மைதானத்தை விரைவில் புனரைமைத்து தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பிரதேசசபை ஒன்றினால் இந்த விளையாட்டு மைதானத்தை பராமரிக்க முடியாது என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதில் அளித்தார்.