5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்துள்ளார்.
எமது செய்திச் சேவையுடன் இடம்பெற்ற நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இம்முறை 2,943 பரீட்சை மையங்களில் பரீட்சை இடம்பெற்றது.
இந்நிலையில், மூன்று, நான்கு பரீட்சை மையங்களில் இடம்பெற்ற சம்பவத்தை வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த பரீட்சை முறைமையையும் குறைக்கூற முடியாது.
மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்துள்ளார்.
அதேநேரம், 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை விரைவில் வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.