ஐரோப்பிய சந்தையை கைப்பற்றும் வகையில், சீனாவின் மின்சார கார் உற்பத்தியாளர்கள் அதிக பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் சரியான கார்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களில், “ஐரோப்பிய புதிய கார் மதிப்பீட்டுத் திட்டத்தின்” கீழ் சீனாவில் தயாரிக்கப்பட்ட பல மின்சார கார் மாடல்கள் சிறந்த தரவரிசைகளை அடைய முடிந்தது.
சில சீன நிறுவனங்கள் ஏற்கனவே நெதர்லாந்து, ஸ்வீடன், டென்மார்க் மற்றும் நார்வே போன்ற நாடுகளில் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தத் தொடங்கியுள்ளன.