முல்லைத்தீவில் கிணற்றினுள் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் மல்லாவி தேறாங்கண்டல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
23 வயதுடைய கணேசன் புஸ்பராஜ் என்ற இளைஞரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.