நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் டிஜிட்டல் பணப்பை மென்பொருள் அறிமுகம் செய்து வைக்கப்பட உள்ளதாக அமைச்சர் நாமல் ராஜ பக்ஷ தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் மேற்குறித்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கையடக்க தொலைபேசி மூலம் பணத்தை செலுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட LANKA QR குறியீட்டை கம்பஹாவில் மக்கள் மயப்படுத்தும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்ண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேவையான சந்தர்ப்பங்களில் எந்தவொரு சிக்கலும் இன்றி உரிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் கைத்தொலைபேசி ஊடாக வழங்கும் வாய்ப்பு சகல பிரஜைகளுக்கும் கிடைக்கும்” என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“கடவுச்சீட்டு, பிறப்பு, விவாகச் சான்றிதழ்கள், பரீட்சைப் பெறுபேறுகள் உள்ளடங்கலான அத்தியாவசிய தனிப்பட்ட ஆவணங்களை தமது கைத்தொலைபேசியில் களஞ்சியப்படுத்துவதற்கான டிஜட்டல் கட்டமைப்பு வசதி இதன் மூலம் கிடைக்கும்.