ஜ.நா.சபையில் வடக்கு – கிழக்கு தமிழர்களின் பிரச்சனைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்க்கொள்ள வேண்டுமென இந்தியா வலியுறுத்தியமை ஆறுதல் தருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு விடயங்களில் இந்தியாவை மீறி ஏனைய நாடுகள் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்காது அத்துடன் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இந்தியாவால் மட்டுமே வலியுறுத்த முடியும்” என்றார்.