இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கும் அரசின் பங்காளிக்கட்சித் தலைவர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதியும், ஶ்ரீலங்கா சுகந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசினேவிற்கும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான அவசர சந்திப்பொன்று நேற்று (23) இரவு இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் ஶ்ரீலங்கா சுகந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகரவும் கலந்து கொண்டிருந்தார். இச்சந்திப்பு மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

நாட்டை மீண்டும் திடமான நாடாக மாற்றியமைப்பதற்கான யோசணைகள் எதிர்வரும் 2 ஆம் திகதி பங்காளிக் கட்சிகளினால் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில், அவை பற்றியும், நாடு எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றியும் இச்சந்திப்பில் கலந்துரையாடப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button