13 வயது சிறுமியை பாலியல் பாலத்காரம் செய்த குற்றச்சாட்டில் அவரது மூத்த சகோதரன் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை எத்திமேல பகுதியில் இக்கொடுரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயிற்றுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை பரிசோதனை செய்த போது அவர் கர்ப்பம் தரித்திருப்பது தெரிய வந்தது.
இந்நிலையில், பொலிஸார் சிறுமியிடம் மேற்க்கொண்ட விசாரணையில் தாத்தா, தாய் மாமா மற்றும் மூத்த சகோதரன் தொடர்ச்சியாக தன்னை பாலியல் பலத்காரம் செய்து வந்ததாக சிறுமி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, சிறுமியின் மூத்த சகோதரன் கைதுசெய்யப்பட்ட நிலையில், மற்றைய இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்ப்டடு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.