பதவிக்கு ஆசைப்பட்டு சுகந்திரக்கட்சியில் இருந்து அரசாங்க பக்கம் தாவி இராஜாங்க அமைச்சு பெற்றுக்கொண்ட சுரேன் ராகவன், சாந்த பண்டார இருவரையும் பதவியில் இருந்து நீக்கினால் மாத்திரமே ஜனாதிபதியுன் பேச்சுக்கு செல்வோமென சுகந்திரக்கட்சி அறிவித்துள்ளது.
புதிய பிரதமருமடன் இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜ பக்ச இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், இதுதொடர்பில் கலந்துரையாடுவதற்கு அணைத்துக்கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், ஶ்ரீலங்கா சுகந்திரக்கட்சி மேற்குறித்த கோரிக்கையை அரசாங்கத்திடம் வைத்துள்ளது. இருவரையும் பதவி நீக்காத சந்தரப்பத்தில் அரசுடன் எந்தவித பேச்சுவார்த்தைக்கும் தாம் செல்லப்போவதில்லையெனவும் சுகந்திரக்கட்சி அறிவித்துள்ளது.