ஜனாதிபதி கோட்டபாய அரசுக்கு ஆதரவாக பெளத்த பிக்குகள் பேரணி ஒன்னை இன்று (12) மேற்க்கொண்டுள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறுபட்ட போராட்டங்கள் மேற்க்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஆதரவாகவும் சில போராட்டங்கள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவ்வகையில் குறித்த போராட்டம் அரசாங்கத்திற்கு ஆதரவாக, கொழும்பு தாமரை தாடாகத்தில் இருந்து பேரணி ஜனாதிபதி செயலகம் நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜனாதிபதி கோட்டபாயவை பதவிவிட்டு விலகுமாறு கோரி தொடர்ச்சியாக போராடிவரும் மக்களும் ஜனாதிபதி செயலகம் முன்பாக இருப்பதால் மோதல் நிலை உருவாகலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.