பொருளாதார பிரச்சனைகளால் நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளில் இருந்து மீட்சிப்பெற ஆறு மாதங்கள் நிதி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்று உங்கள் திறமையை நிருபித்துக் காட்டுங்கள் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ அவர்களுக்கு ஆளுங்கட்சியினால் பகிரங்க சவால் விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று (06) உரையாற்றிய அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான ரொஷான் ரணசிங்கவே மேற்படி சவாலை சஜித்பிரேமதாஸவிடம் முன்வைத்தார்.