வரலாற்று பிரசித்திபெற்ற புனித கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (11) ஆரம்பாமாகி நாளையும் (12) இடம்பெறவுள்ளது.
கொரோனா தொற்றைக்கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ளவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையில் 100 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவைச் சேர்ந்த 100 பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1974 ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கும், இலங்கையின் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கும் இடையில் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் ஊடாக இலங்கையிடம் கச்சதீவு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.