இலங்கைசெய்திகள்

அரச நிறுவனங்களுக்கு புதிய நடைமுறை அமுலாகின்றது

நாட்டில் பாரிய பிரச்சனையாக மாறியுள்ள மின்வெட்டு பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் பல மாற்றுவழி முறைகளை மேற்கொள்ள தீர்மானித்து வருகின்றது.

அவ்வகையில், நாட்டின் அரச நிறுவனங்களில் உள்ள காற்றுச்சீரமைப்பியை (A.c) இரண்டு மணித்தியாலங்கள் நிறுத்தி வைக்குமாறு சகல அரச நிறுவனங்களுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவுறுத்துமாறு பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க மேற்குறித்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button