நாடாளுமன்றத்தில் இன்று (23) விசேட விவாதம் இடம்பெறுமென எதிர்கட்சியின் பிரதம கொறடாவும், நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இன்றைய விசேட நாடாளுமன்ற அமர்வு காலை 11.00 மணியில் இருந்து மாலை 5.30 மணிவரை இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் தொடர்ச்சியான விலையேற்றம், எரிபொருள் பற்றாக்குறை, நாட்டின் பொருளாதாரம் மற்றும் நாட்டின் பாதுகாப்புத் தொடர்பாகவே இன்றைய விவாதம் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினாலேயே இவ் பிரேரணை சமர்ப்பிக்கப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.