மாமரத்தில் ஏறி மரக்கொப்பு வெட்டியவர் கொப்பு முறிந்து கீழே வீழ்ந்ததில் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (14) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் மானிப்பாய் – சங்குவேலி தெற்கைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய நாகேந்திரம் நகுலேந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
25 அடி உயரத்தில் ஏறி மாமரக்கொப்பு வெட்டும்போது அவர் நின்ற கொப்பு முறிந்து வீழ்ந்ததில் சுயநினைவு அற்று இருந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.