நாடு பூராகவும் அரசுக்கெதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில், கேகாலை கொடியாகும்புற நகரில் பிரதான வீதி முற்றாக முடக்கப்பட்டு மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கொடியாகும்புற நகரில் அதிகளவான பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில, நேற்று கேகாலை ரம்புக்கனைப் பகுதியில் போராட்டம் மேற்க்கொண்ட மக்கள் மீது பொலிஸார் மேற்க்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிந்த நிலையிலும், இன்று கேகாலையில் மக்களால் போராட்டங்கள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது.