காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு சர்வதேச நீதி கோரி யாழ். மத்திய பஸ் நிலையத்தில் நாளை (03) நடைபெறவுள்ள கண்டனப் பேரணிக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நீதிக்கான இந்தப் போராட்டத்தில் மக்கள் இயக்கங்கள், சிவில் அமைப்புக்கள், மதத்தலைவர்கள், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், மகளிர் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர் அமைப்புக்கள், வர்த்தகர் சங்கங்கள், கிராமமட்ட அமைப்புக்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், மீனவர் சம்மேளனங்கள், தனியார் போக்குவரத்துச் சங்கங்கள், ஓட்டோ சங்கங்கள், விவசாய அமைப்புகள், ஆசிரியர் சங்கங்கள், பல்கலைக்கழக ஊழியர் சங்கங்கள், ஊடகவியலாளர்கள் என அனைத்து அமைப்புக்களையும் மக்களையும் பெரும் எழுச்சியாக பங்குபற்றுமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அன்புரிமையுடன் அழைத்து நிற்கிறோம்” – என்றார்.