வடமாகாண சபையின் செயலாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் செயலாளராக பணியாற்றி வந்த செந்தில்நந்தனன் மாகாணசபை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநரின் செயலாளராக பணியாற்றி வந்த சரஸ்வதி மோகநாதன் சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிவந்த வரதீஸ்வரன் கல்வி அமைச்சின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
பேரவை செயலாளராக பணிபுரிந்த குகநாதன் பிரதி பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.