பற்றிக் உற்பத்தி உள்ளூர் விற்னை நிலையம் இன்று (20) யாழ்ப்பாணத்தில் பற்றிக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.