இலங்கையின் தன்னார்வு தொண்டு நிறுவனமாகவும், அரச சார்பற்ற (NGO) அமைப்புமான பூமணி அம்மா அறக்கட்டளை கடந்த 15/04/2014 தொடக்கம் இலங்கை முழுவதும் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்து வருகின்றது.
இதன் ஸ்தாபக தலைவராக, யாழ்ப்பாணம் தீவகம் சரவணையை சொந்த இடமாகவும் தற்பொழுது பிரான்ஸ் நாட்டில் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ் (ITR)பணிப்பாளராகவும் விளங்கும் திரு.விசுவாசம் செல்வராசா அவர்களின் வழிகாட்டலில்,கொட்டடி சிவன் பண்ணை வீதியில் அறக்கட்டளைக்கான பொது மக்கள் தொடர்பக பணிமனை இன்று (16)திறந்து வைக்கப்பட்டது.
திறப்பு விழாவிற்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளர் J.X.செல்வநாயகம் அவர்களும் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டின் பிரபல தொழிலதிபர் T.சந்திரகுமார் அவர்களும் கௌரவ விருந்தினராக மண்டைதீவு, அல்லைப்பிட்டி பங்குத் தந்தையும் தீவக மறைக் கோட்ட குரு முதல்வரும்,தீவகப் பகுதி சிவில் சமூக அமைப்புக்களின் முக்கியஸ்தருமான அருட்பணி மனுவேற்ப்பிள்ளை டேவிட் அடிகளார் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கௌரவ விருந்தினர் வரிசையில் திருகோணமலை மற்றும் லண்டனை சேர்ந்த சிறந்த சமூக சேவையாளர் கந்தசாமி லிங்கராசா (சிங்கன்)அவர்களும் கலந்து சிறப்பித்தார்.