கோட்டபாய அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் (11) தொடர்கின்றது.
அதிகளவான மக்கள் காலி முகத்திடலிலும் ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு முன்பாக கூடியும் தொடர்ச்சியாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் காலி முகத்திடலில் தற்காலிக கூடாரங்கள் கழிவறைகள் அமைத்தும், உணவுகள் சமைத்தும் தொடர்ச்சியாக தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.