இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கையின் உண்மை நிலையை அறிய ஐக்கிய நாடுகள் சபை எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த விடயங்களைக் கண்டறிய இலங்கைக்குள் அலுவலகம் ஒன்றை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே இந்த குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக புதிய அலுவலகம் ஒன்றைத் திறக்கவும் பிரதிநிதிகளை பணியில் சேர்ப்பதற்கும் தேவையான நிதியை ஒதுக்குவதற்காக யோசனையை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், அலுவலகத்தை இலங்கையில் ஏற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இதற்கு எதிர்ப்பை வெளியிட்டால், அந்த அலுவலகத்தை இந்தியாவில் திறக்கவும் அங்கிருந்து குற்றச்சாட்டுக்கள் பற்றிய விசாரணைகளை நடத்தவும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது. 

Related Articles

Leave a Reply

Back to top button