“குப்பி விளக்கின் வெளிச்சத்திலேயே ஜனாதிபதியின் சுபீட்சத்தின் தொலைநோக்கு விஞ்ஞாபனத்தை வாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் வாக்குகளின் ஊடாக மாத்திரமே ஆட்சியைக் கவிழ்ப்போம்.”
- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவித்தார்.
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் விசேட மாநாடு நேற்று (05) பதுளையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு அறிவிப்பு விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“இந்த அரசு நாட்டைச் சீரழித்துள்ளது. தன்னால் முடியாது என்பதை செயல்கள் ஊடாக ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், உறுப்பினர்களை வளைத்துப் போட்டு, ஆட்சி மாற்றம் செய்யும் நடைமுறை எமக்குப் பொருந்தாது. ஜனநாயக வழியிலான மாற்றமே தேவை. அதற்கான வலியுறுத்தல் கொடுக்கப்படும் என்றார்.