உயர் தரப் பரீட்சையின் போது எந்த ஒரு இலத்திரனியல் சாதமனமும் கொண்டு வருவதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேற்குறிப்பிட்ட விதிகளை மீறினால் ஐந்தாண்டு காலத்திற்கு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தடை விதிக்கப்படும் என பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சை சட்டத்தின்படி, கைத்தொலைபேசிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய புளூடூத் சாதனங்கள் போன்ற இலத்திரனியல் சாதனங்களை கொண்டு வர பரீட்சார்த்திகளுக்கு அனுமதி இல்லை எனவும்
மேலும் இலத்திரனியல் சாதனங்களை பரீட்சார்த்திகள் சென்றடையக்கூடிய அல்லது அணுகக்கூடிய இடங்களில் வைத்திருப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.