இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வார மூன்றாம் நாள் அனுஷ்டிப்பு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு இன்று வடக்கு – கிழக்கின் பல பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இறந்தவர்களுக்கு ஈகச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இவ் அஞ்சலி நிகழ்வில் இறந்தவர்களின் உறவுகள் மற்றும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

யாழ்பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்களால் முள்ளிவாய்க்கால் தூபிக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்.குருநகர் சவக்காலையடிப் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்கத்தின் தலைவர் வணக்கத்துக்குரிய வேலன் சுவாமிகள், யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள், சமூகமட்ட அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

சாவக்சேரி பஸ்நிலையத்திலும் முள்ளிவாய்க்கால் கஞ்சிவழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதில் வேலன்சுவாமிகள், சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் க.வாமதேவன் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

நல்லூர் தியாகதீபம் திலீபனின் நினைவுத்தூபியின் முன்னால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பிரதான வீதியிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை தூபிக்கு முன்னால் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மாநகர சபை உறுப்பினர்கள், மதகுருமார்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button