வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் முல்லைத்தீவில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் ஐந்து வருடங்களை இன்றுடன் நிறைவு செய்யும் நாளிலும், மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கண்டனப்பேரணி ஒன்று இன்று (08) முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டம் முல்லைத்தீவு இராஜப்பர் தேவாலயத்திலிருந்து ஆரம்பமாகி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்றடைந்தது.
இப்போராட்டத்தில் கலந்து கொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பல கோசங்களை எழுப்பியும், தமது கவலைகளை கண்ணீராவும் வெளியிட்டனர்.
இப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிந்த சமயத்தில் இராணுவப் புலனாய்வாளர்கள் போராட்டகாரர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்ப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.