கரவெட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு இன்று (10) வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உதவி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இவ் நிகழ்வில், கரவெட்டி பிரதேச செயலர் ஈ.தயாரூபன், சமுர்த்தி தலமை பீட முகாமையாளர் இ. அன்ரனி, கருத்திட்ட முகாமையாளர் ந.சுமீரா, ஆகியோர் கலந்துகொண்டு உதவிப் பொருட்களை வழங்கி வைத்தனர்.