யாழ்ப்பாணத்தில் நேற்று ஐக்கிய மக்கள் சக்தியினரால் மேற்க்கொள்ளப்பட்ட போராட்ட பேரணியில் அரச ஆதரவாளர்கள் எனத்தெரிவிக்கப் படுபவர்களால் குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது.
அரச ஆதரவாளர் எனத் தெரிவித்து யாழில் பல கெவலம்கெட்ட செயல்களை செய்துவரும் அருண் சித்தார்த் என்பவரும், இரண்டு சிங்களவர்களுமே போராட்டத்தை குழப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மக்களால் மூவரும் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில் பொலிஸராரினால் மீட்கப்பட்டனர். தம்மீது தாக்கியவர்களை கைதுசெய்யுமாறு பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்ய சென்ற வேளையில், இக்குழப்பத்திற்கு காரணம் நீங்கள் தான் எனத் தெரிவித்து அருண்சித்தார்த்தையும், சிங்கள நபரையும் பொலிஸார் கைதுசெய்தனர்.
இந்நிலையில், பொலிஸார் எச்சரிக்கை செய்து பிணையில் அவர்களை விடுவித்துள்ளனர்.