இலங்கைசெய்திகள்

பெரமுனவை விட்டு வெளியேறும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ஆளுங்கட்சியான 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசை விட்டு வெளியேறி சுயாதீனமாக செயற்பட உள்ளதாக தென்னிலங்கை அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஶ்ரீலங்கா பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்றவர்களே இவ்வாறு சுயாதீனமாக இயங்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுசில் பிரேமஜயந்த, சந்திம வீரக்கொடி, நிமல் லங்சா, கெவிந்து குமாரதுங்க, அனுரபிரியதர்ஷன யாப்பா, பிரேமனாத் தொலவத்தை மற்றும் சில ராஜாங்க அமைச்சர்கள் உட்பட பத்துபேர் இதில் உள்ளடங்குகின்றனர்.

சௌபாக்கிய திட்டத்தை நடைமுறைப்படுத்தாமை, ரூபாயை மிதக்கவிட்டு, பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்த மக்கள் தாங்க முடியாத அளவில் அதிக விலையில் அத்தியவசிய பொருட்களை விற்பனை செய்ய இடமளித்துள்ளமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுயாதீனமாக இயங்க மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button