இலங்கைசமீபத்திய செய்திகள்
தனுஷ்க குணதிலக்க சிட்னியில் கைது
இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க அவுஸ்ரேலியா சிட்னியில் வைத்து அவுஸ்ரேலியாப் பொலிஸரால் நேற்றுக் (05) கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் ஒருவர் வழங்கிய குற்றச்சாட்டுக்கு அமைய பாலியல் குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ரி -20 உலக கிண்ணத் தொடருக்கான இலங்கை அணியில் இடம்பிடித்திருந்த குணதிலக்க உபாதை காரணமாக விலிகியிருந்தார்.
இந்நிலையில், தனுஷ்க குணதிலக்க பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணியுடன் தோல்வியடைந்த இலங்கை அணி இன்று நாடு திரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது.