இலங்கைசமீபத்திய செய்திகள்
தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு கூட்டாக எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு
உள்ளூராட்சி சபைகளின் தேர்தலை மீண்டும் பிற்போடுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக அணைத்து எதிர்கட்சிகளினாலும் ஒன்றிணைந்த பிரகடனத்தில் கைச்சாத்திடும் செயற்பாடு நேற்று (20) நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இந்நடவடிக்கையில், ஐக்கியமக்கள் சக்தி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஶ்ரீ லங்கா சுகந்திரக்கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, பிவித்துறு ஹெல உறுமய, 43 வது படையணி, ஶ்ரீலங்கா மக்கள் கட்சி, லங்கா சமசமாஜகட்சி, ஶ்ரீலங்கா கம்யூனிட் கட்சி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், நவலங்கா சுதந்திரக்கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, விஜயதரணி மக்கள் சபை, முன்னிலை சோசலிசக்கட்சி, உத்தரசபை உள்ளிட்ட எதிர்கட்சிகள் கையொப்பம் இட்டுள்ளன.