யாழில் நேற்றிரவு (27) இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இவ்விபத்து நாவாந்துறையில் இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வேகக்கட்டுப்பாட்டையிழந்து மதிலுடன் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கொட்டடிப்பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நவரட்ணராஜா சங்கீத் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.