கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டுமென காலி முகத்திடலில் தன்னெழுச்சியாக இடம்பெற்றுவரும் மக்கள் போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
இன்று (17) 9ஆவது நாளாகவும் கோட்டா கோ போராட்டம் தீவிரம் பெற்று வருகின்றது. அதிகளவான மக்கள் போராட்டக்களத்தை நோக்கி விரைந்தவண்ணம் உள்ளனர்.