ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட மழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 100 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்று தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக திருப்பதி, சித்தூர் , கடப்பா, உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. வீதியில் வெள்ளம் தேங்கியதில் பேருந்துகள், சரக்கு வான்கள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
தேசியப் பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனந்தபுர் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 10 பேர் ஹெலிகாப்டர் மூலமாக மீட்கப்பட்டனர்.
சாலைகள், ரயில் தண்டவாளங்கள் சேதம் அடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.