ரத்தன் டாடா, மும்பை மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் மோசமான உடல்நிலை காரணமாக நேற்று மாலை அனுமதிக்கப்பட்டு நிலையில் இரவு மறைந்தார்.
நம் நாட்டில் சுமார் 140 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். ஆனால் ரத்தன் டாட்டாவை போல மரியாதை கொண்ட தொழிலதிபர்கள் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். 86 வயதான ரத்தன் டாட்டாவின் வெற்றி இந்தியாவின் பொருளாதாரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தொழிலதிபர்களில் இவரும் ஒருவர்.
டாடா பெரிய சர்ச்சைகள் ஏதுமில்லாத ஒரு மூத்த தொழில்துறை தலைவர். புத்திசாலித்தனம், தொலைநோக்கு பார்வை மற்றும் பணி நெறிமுறைகளுக்கு பெயர் பெற்ற இவர், தனது குடும்ப வணிகத்தை சர்வதேச சாம்ராஜ்யமாக மாற்றியுள்ளார். அவரது பதவிக் காலத்தில், டாட்டா குழுமத்தின் வருவாய் பன்மடங்கு அதிகரித்தது. 2011 முதல் 2012-ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 100 பில்லியன் டாலர்கள்
திங்கள் கிழமை அன்று மும்பையின் பிரீச் கேண்டி மருத்துவமனையில் ரத்தன் டாட்டா அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி வெளியானதை தொடர்ந்து, பலரும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். ஆனால் அதன் பிறகு தனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்று ரத்தன் டாட்டா தெளிவுபடுத்தினார்.
எளிமையான மனிதர்: 1937-ஆம் ஆண்டு புகழ்பெற்ற டாடா குடும்பத்தில் பிறந்த ரத்தன் டாட்டா 10 வயதில் தனது பெற்றோரை பிரிந்து பாட்டியால் வளர்க்கப்பட்டார். ஆரம்பத்தில் தனிப்பட்ட சவால்களையும் எதிர்கொண்டார். இது அவருக்கு ஆழமான புரிதலை தந்தது.
கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை மற்றும் கட்டமைப்பு பொறியியல் பட்டம் பெற்றார் மற்றும் ஹார்வர்ட் அட்வான்ஸ்டு மேனேஜ்மென்ட்-இல் பட்டம் பெற்றிருந்தாலும், ரத்தன் டாடா IBM-இன் வேலை வாய்ப்பை நிராகரித்தார்.
1962-ஆம் ஆண்டு இல் டாடா மோட்டார்ஸ் கடைத் தளத்தில் வேலை செய்யத் தொடங்கினார். தனது தொழில் வாழ்க்கையை மிகவும் அடித்தளத்தில் இருந்து உருவாக்க ஆரம்பித்தார். டாட்டா குழுமத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களிலும் பணிபுரிந்தார். இறுதியில் 1971-ஆம் ஆண்டு நேஷனல் ரேடியோ மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு இயக்குனரானார். தொழிற்பயிற்சியிலிருந்து இயக்குனராக மாற அவருக்கு 9 ஆண்டுகள் எடுத்தது. ஆனால் அப்போதும் அவர் பின்வாங்கவில்லை. சாதாரண மனிதனின் எதார்த்த நுணுக்கங்களை புரிந்து கொள்வதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை கொண்டவர் ரத்தன் டாட்டா. அதுமட்டுமின்றி டாட்டா குழுமம் முழுவதும் உள்ள பல்வேறு தொழில்களிலும் விலைமதிப்பற்ற அனுபவத்தை பெற்றார்.
தனது பாட்டி தனக்கு கண்ணியத்தை கற்றுக் கொடுத்ததாகவும், அதை இன்று வரை தன்னுடன் வைத்திருப்பதாகவும் ரத்தன் டாட்டா கூறியுள்ளார். இந்தியாவில் எல்லா இடங்களிலும் கிட்டத்தட்ட காணக்கூடிய ஒரு பிராண்ட் என்றால் அது டாட்டா என்று சொல்லலாம். நாட்டில் டாட்டா தயாரிப்புகள் மற்றும் சேவையைப் பயன்படுத்தாத ஒருவரை கண்டுபிடிப்பதும் கடினமாக இருக்கும். ஏனெனில் டாட்டா உப்பு முதல் டாடா மோட்டார்ஸ் வரை பலவற்றிலும் டாட்டா பிராண்ட் அடங்கியுள்ளது. ஆனால் இந்த பயணம் அவர்களுக்கு எளிதாக இருக்கவில்லை.
1991-ஆம் ஆண்டில் ஜேஆர்டி டாட்டாவிடம் இருந்து டாடா சன்ஸ் தலைவராகவும், டாட்டா அறக்கட்டளையின் தலைவராகவும் ரத்தன் டாட்டா பொறுப்பேற்றார். இவருடைய நிர்வாகத்தின் கீழ் டாட்டா குழுமம் பல்வேறு நிறுவனங்களை கையகப்படுத்தியது.
ரத்தன் டாடாவின் புத்திசாலித்தனமான தலைமையின் கீழ் இந்த டாடா குழுமம் அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்தத் தொடங்கியது. சுமார் 100 நாடுகளுக்கும் மேல் விரிவடைந்தது. இதனால் இந்திய தொழில்துறைக்கு குறிப்பிடத்தக்க ஊக்கம் ஏற்பட்டது. இந்தியாவை மையமாகக் கொண்ட டாடா நிறுவனத்தை உலகளாவிய வணிகமாக மாற்றிய பெருமை ரத்தம் டாட்டாவுக்கு உண்டு.
டாடா நிறுவனம் உலகெங்கிலும் உள்ள ஹோட்டல்கள், இரசாயன நிறுவனங்கள், தகவல் தொடர்பு நெட்வொர்க்குகள் ஆகியவற்றை வாங்கியது. டாடா டிரக், பஸ் அல்லது எஸ்யூவியைப் பார்க்காமல் நீங்கள் இந்தியாவில் ஒரு தெருவைக் கடக்க முடியாது.
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் ரத்தன் டாட்டா பெரும் பங்கு வகித்தார். டாடா நானோ போன்ற முயற்சிகளுக்கு தலைமை தாங்கி உள்ளார். உலகின் மிகவும் மலிவான காரான டாட்டா இன்டிகாவை மறந்து விட முடியுமா?
எப்போதுமே ரத்தன் டாடாவின் பார்வை லாபத்திற்கு அப்பால் இருக்கும். அவர் சமூகப் பொறுப்பு ஆகியவற்றில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். IIFL Wealth Hurun India Rich List 2021-இல் ரத்தன் டாடா 433-வது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் மிகவும் தாராளமான தொழிலதிபர்களில் ஒருவர்.
ரத்தன் டாடா தனது ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலுக்கு நிர்வாக மையத்தை கட்டுவதற்காக $50 மில்லியன் நன்கொடையாக வழங்கினார். டாடா அறக்கட்டளைகள் இந்திய அறிவியல் கழகம் மற்றும் பல்வேறு IIM வளாகங்கள் போன்ற பல கல்வி நிறுவனங்களுக்கு நிதியளித்துள்ளன.
லதா