கஜகஸ்தானில் இருந்து ஏவப்பட்ட சோயுஸ் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ரஷ்யாவை சேர்ந்த தளபதி ஒலெக் ஆர்டெமியேவ், டெனிஸ் மத்வீவ் மற்றும் செர்ஜி கோர்சகோவ் ஆகியோர் சென்று சேர்ந்துள்ளனர். இவர்கள் உக்ரைன் தேசிய கோடியை பிரதிபலிக்கும் மஞ்சள் மற்றும் நீலநிற உடைகளை அணிந்திருந்தமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது நடைபெறும் ரஷ்ய – உக்ரைன் போரால் அமெரிக்கா ரஷ்யா விண்வெளி உறவில் விரிசல் வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது சுமகமாகவே முடிந்துள்ளது. இருப்பினும் மஞ்சள் மற்றும் நீல நிற உடை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.