
ஐம்பதாவது அகவை காணும் உறவுகளை அகம் மகிழ்ந்து வாழ்த்துகின்ற ஒன்று கூடல் நிகழ்வு இன்று காலை பதினொரு மணி முதல் மாலை ஐந்து மணி வரை கண்டி வீதி யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள venue green star villa எனும் இடத்தில் நடைபெறவுள்ளது.
1996 இல் உயர்தரம் கற்று 1998இல் பல்கலைக்கழகம் சென்று 2002 இல் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய வணிக முகாமைத்துவ மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வில் பொன்னகவை கண்ட உறவுகளை வாழ்த்துகின்ற வைபவம் நடைபெற உள்ளது.
பொன் அகவை காண்கின்ற
எம். இனிய
உறவுகளுக்கு
வண்ணத் தமிழால்
வார்த்தை கோர்த்து
வாழ்த்திசைக்கிறோம்
இந்நாளில்…
தொண்ணூற்றி ஆற்றிலே
உயர்தரம் கற்று
தொண்ணூற்றி எட்டிலே
பல்கலைக்கழகம் சென்று
பாடித்திரிந்தோம்
பறவைகளாக…
கற்றோம்
கல்வியும் கலைகளும்
பெற்றோம்
புதுப்புது அனுபவங்கள்…
பல்கலை என்னும்
புது உலகினிலே
பட்டாம்பூச்சிகளாய்
வலம் வந்தோமே…
இரண்டாயிரத்து இரண்டிலே
பல்கலை விட்டு வந்து
படிப்பின் பயனாய்
பணிகள் பெற்று
சுமைகளுக்குள்
சுகமாய் புகுந்தாலும்
பசிய நினைவுகள்
ஆழ் மனதில்
அமிழ்ந்திருக்க
கூடி மகிழ்வதில்
பேரின்பம் கொண்டோமே…
பொன்னகவை கண்ட
அன்பு நிறை உறவுகளை
இந்நாளில் வாழ்த்துகிறோம்
இனிதே வாழ்ந்திடுவீர்…
பகீரதன்
பரணீதரன்
சாம் பவுல் பீரிஸ்
பார்போற்ற நீங்கள்
வாழ்வாங்கு வாழ
அகம் நிறைந்து வாழ்த்துகிறோம்
தர்மசீலன்
திலீபன்
வசீகரன்
நிரோசானந்
ஞாலமெல்லாம் ஒலிக்கட்டும்
தோழர்களே உங்கள் பெயர்…
பிரபாகரன்,
பிரியத்துக்குரியவனே
உன் பெயர்
வெறும் பெயரல்ல,
அது இனமான
அடையாளம்…
என்றும் மகிந்திரு
இனியவனே..
பிரதீபன்
செல்வேந்திரதாஷ்
சுரேஸ்குமார்
உமேஷ்
குறிஞ்சீதரன்
எமதருமை
நண்பர்களே
அவனி உங்களுக்காய்
புதுப்பாடல் இசைக்கட்டும்…
அன்பால்
நட்பால்
என்றும் இணைந்திருப்போம்…