
இலங்கையில் எதிர்காலத்தில் மாபெரும் போராட்டம் உருவாகும் அச்சுறுத்தல் நிலை காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் .
அவர் மேலும் தெரிவிக்கையில் அமெரிக்காவால் ஆடைகளுக்கான வரியை 46.5 வீதமாக உயர்ந்துள்ளது. இதனால் ஆடை தொழில்கள் சிக்கலுக்கு உள்ளாகின்றன. சஜித் பிரேமதாஸ இந்த பிரச்சினையை தொடர்ந்து வெளிநாட்டு தூதர்களிடம் முன்வைத்துள்ளார். ஆனால் அரசாங்கம் எந்த தீர்வும் வழங்கவில்லை. அரசாங்கம் 18 வீத டிஜிற்றல் வரி விதித்துள்ளது. இது நாட்டின் இளைஞர்களுக்கும் தொடர்பாடல்துறைக்கும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இவர்கள் மீது ஆதரவுடன் பதவிக்கு வந்த அரசு இப்போது இவர்களையே வரிமூலம் தாக்குகிறது. மக்கள் குறைந்த வருமானத்தில் வாழ முயற்சி செய்யும் நிலையில் அரசின் வரிவிதிப்புக்கள் அவர்களை கடுமையாகக் பாதிக்கின்றன . இது எதிர்காலத்தில் பெரும் மக்கள் போராட்டம் உருவாகும் அபாயத்தில் உள்ளது என்றார்..