இலங்கைசெய்திகள்

பூநகரியில் இலவச குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான நடமாடும் சேவை!!

water

பூநகரியில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் வீடுகளுக்கான இலவச குடி நீர் இணைப்பை வழங்குவதற்கான நடமாடும் சேவை எதிர்வரும் வியாழக் கிழமை (25.11.2021) அன்று பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் பள்ளிக்குடா நான்காம் கட்டைப் பகுதி, மட்டுவில்நாடு கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் அத்தாய், கொல்லக்குறிச்சி கிராம அலுவலர் பிரிவில் செல்லியாதீவு பிரதேசங்களில் இடம்பெறவுள்ளது.

மேற்படி கிராம அலுவலர் பிரிவுகளிலும் எதிர்வரும் வியாழக் கிழமை உத்தியோத்தகர்கள் வீடு வீடாக வருகை தரவுள்ளனர், எனவே பிரதான நீர் விநியோக குழாயிலிருந்து 25 மீற்றருக்குள் புதிய நீர் இணைப்பு தேவைப்படும் பொது மக்கள் விண்ணப்படிவத்தை பெற்று வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வழங்குமாறும். கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி அலுவலக தொலைபேசி இலக்கமான 021 2283981 தொடர்பு கொள்ளுமாறும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது

Related Articles

Leave a Reply

Back to top button