யாழ்.அராலியில் பாடசாலைக்கு சென்ற 4ம் வகுப்பு மாணவனுக்கு காய்ச்சல் என பொய் சொன்ன ஆசியரால், அதிபர் மாணவரை வீட்டிற்கு துரத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் மாணவனின் தந்தை கல்வி அமைச்சின் செயலாளருக்கு சம்பவம் குறித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில்,
4ம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவன் கடந்த 08.11.2021 அன்று பாடசாலைக்கு செல்லவில்லை. 09ஆம் 10ஆம் திகதிகளில் சீரற்ற வானிலை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மாணவன் கடந்த 11ஆம் திகதி வழமைபோல பாடசாலைக்கு சென்றிருந்த நிலையில் வகுப்புக்கு சென்ற மாணவனை அதட்டிய வகுப்பாசிரியர் , சக இன்னொரு மாணவனை அழைத்து ” இவனுக்கு காய்ச்சல் என அதிபரிடம் கூறு” என அதிபரிடம் அனுப்பி வைத்தார். அம் மாணவனும் ஆசிரியர் சொன்னதை அதிபரிடம் கூறியுள்ளான். அதைக்கேட்ட அதிபர் குறித்த மாணவனை திட்டியதுடன் வீட்டுக்கு ஓடு என விரட்டியடித்தார் .
இதனால் மனமுடைந்த அந்த மாணவன் அழுதவாறு வீட்டிற்கு செல்கையில், மாணவனுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக தந்தையார், பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்தவேளை மகன் அழுதபடி வீதியால் நடந்து வருவதை அவதானித்துள்ளார்.
அவனிடம் நடந்ததை விசாரித்தபோது பாடசாலையில் நடந்தவற்றை மாணவன் தந்தையிடம் ஒப்பித்தான். இதனயைடுத்து பாடசாலைக்குக் மகனை கூட்டிச் சென்ற தந்தை, மானவன் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட விடயம் தொடர்பில் அதிபரிடம் வினவியபோது. ” உனது மகனுக்கு காய்ச்சல்” என அதிபர் கூறினார்.
இதைக்கேட்ட நான் காய்ச்சல் என்றால் காய்ச்சல் பார்க்கும் கருவியை எடுத்து எனது மகனை இப்பொழுதே பரிசோதியுங்கள் எனக் கேட்டேன். எனது தொலைபேசி இலக்கம் வகுப்பாசிரியரிடம் உள்ளது. மகனுக்கு காய்ச்சல் என்றால் ஏன் எனது தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ளவில்லை.
எனது மகனுக்கு காய்ச்சல் இல்லை. காய்ச்சல் என்றால் பிள்ளையை நாங்கள் பாடசாலைக்கு அனுப்புவோமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். பிள்ளை பாடசாலையயில் இருக்கிறது என நாங்கள் இருப்போம்.
இடைநேரத்தில் பெற்றோருக்கு அறிவிக்காமல் நீங்கள் வீட்டிற்கு துரத்திவிட்டால் வரும் வழியில் அவருக்கு ஏதாவது நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பு? எனவு ம் காட்டமாக கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த பாடசாலை நிர்வாகம் மகனது பிறப்புச் சான்றிதழை எடுத்துச் சென்று அவனை வேறு பாடசாலையில் சேருங்கள் என்றார்.
இவ்வாறான நிலையில் பொறுபற்ற விதத்தில் அதிபர் இவ்வாறு தொடர்ந்து செயற்பட்டால் பெற்றோர்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பில் ஈடுபடவேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் பாதிக்கபட்ட மாணவைன் தந்தை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.