நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதவிர, மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக சந்தேகித்தாலோ அல்லது தொற்று உறுதி செய்யப்பட்டாலோ பாடசாலைகளில் பின்பற்ற வேண்டிய முறைமைகள் அடங்கிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, அவ்வாறு மாணவர் ஒருவர் அடையாளம் காணப்பட்டால், அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான தனி இடம் ஒன்று பாடசாலைகளில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பாடசாலைகளின் நுழைவாயிலில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலம் குறித்துக் கண்காணிப்பது அத்தியாவசியமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.